ETV Bharat / state

'அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வேண்டும்' - தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை கடந்த ஆண்டு போல் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் வழக்கறிஞர்களைக் கொண்ட குழு நடத்துவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கபடும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Avaniapuram jallikattu needs all community people participation
Avaniapuram jallikattu needs all community people participation
author img

By

Published : Jan 10, 2020, 11:14 PM IST

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உட்பட பலர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்ததுபோது, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினை அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கடந்த ஆண்டைப் போல ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் நீதிமன்றமே குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கருத்து தெரிவித்து, இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

'தமிழரின் பொங்கல் கலாசாரம் பெருமை மிக்கது' - வியக்கும் சீன மாணவிகள்

Intro:ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்கில் மட்டுமே நன்கொடை செலுத்த வேண்டும் - மதுரை ஆட்சியர் வினய்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பரிசு பொருட்களை தனி நபர்களிடமோ வேறு அமைப்புகளிடமோ வழங்கக்கூடாது. நன்கொடை வழங்க விரும்புவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.Body:ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்கில் மட்டுமே நன்கொடை செலுத்த வேண்டும் - மதுரை ஆட்சியர் வினய்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பரிசு பொருட்களை தனி நபர்களிடமோ வேறு அமைப்புகளிடமோ வழங்கக்கூடாது. நன்கொடை வழங்க விரும்புவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுளாள செய்திக் குறிப்பில்,

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக எந்தவொரு தனிநபர் மற்றும் விழாக்குழுவினரிடமோ நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மேற்கண்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் தல்லாகுளம் கிளை கனரா வங்கி கணக்கு எண் 1012101049222 (IFSC Code No.CNRB0001012) (MICR Code No.625015008) என்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

தங்களது பரிசுப்பொருட்களை அளிக்க விரும்புபவர்கள் அவனியாபுரம் கிராமத்திற்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழு தலைவரான மேலூர்ஸவருவாய் கோட்டாட்சியரிடமும் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழு தலைவரான மதுரை வருவாய் கோட்டாட்சியரிடமும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வினய் குறிப்பிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.