மதுரை மாவட்டம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (57). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று (ஜன. 3) இரவு மார்க்கண்டேயன் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
விபத்து:-
அப்போது, அவனியாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழப்பு:-
இதில், மார்க்கண்டேயன் மீது லாரியின் பின் டயர் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தொழில் போட்டி காரணமாக பெண் மளிகைக் கடை உரிமையாளர் கார் ஏற்றிக் கொலை!