ETV Bharat / state

காவல்நிலையத்தில் மாணவரை தாக்கிய வழக்கு: டிஜிபி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு - மதுரை செய்திகள்

ராமநாதபுரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாணவன் உள்பட இருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

காவல்நிலையத்தில் மாணவரை தாக்கிய வழக்கு
காவல்நிலையத்தில் மாணவரை தாக்கிய வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:31 PM IST

மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துமாரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”எனது மூத்த மகன் டேவிட் ஒட்டுநராகவும், இளைய மகன் கார்த்திக் 12ஆம் வகுப்பும் படித்து வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி கேணிக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் காவல்துறை வாகனத்தில் வீட்டிற்கு வந்து எனது மகன்களை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற போது எனது மகன் உள்பட 4 பேர் மீது அனுமதி இன்றி பட்டாசு வெடித்ததாக கூறினர். இந்நிலையில் காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவலர்கள் எனது மகன்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த எனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக சைல்ட் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டேன்.

உடனடியாக சைல்ட் லைன் அமைப்பினர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மகன்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் புகாரளித்த தமிழ்ச்செல்வி என்பவர் வழக்கை திரும்பப் பெற்றதாக கூறி எனது மகன்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிகிச்சைக்காக எனது மகன்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவல்துறையினர் மீது எங்கும் புகார் கொடுக்கக்கூடாது என எங்களை அச்சுறுத்தியதோடு எங்கள் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டினர்.

எனவே, பொய்யான குற்றச்சாட்டில் எனது மகன்களை சட்டவிரோதமாக சிறையில் வைத்து கொடூரமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் உடனிருந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் முன்னிலையில் இன்று விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உதவி ஆய்வாளர் ஜோதி முருகன் மனுதாரரின் இரண்டு மகன்களையும் கொடூரமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்து இரண்டு வருடம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் வழக்கறிஞர் தாக்குதலில் காயம் அடைந்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து மாணவன் உள்பட இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய துணை காவல் ஆய்வாளர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல் திருப்தி அளிக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு காவல்துறை தலைவர் DGP மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் IG ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஏன் பரிசீலிக்கவில்லை என்பதற்கான விளக்கமளிக்கும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 18ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனமா? சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.