தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், விபத்தின் மூலம் கால்களை இழந்த நான்கு பேருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னால் வழங்கப்பட்ட செயற்கைக் கால்களை விட இது மிக எடை குறைவு, நீண்ட நேரம் அணியவும், மேடு பள்ளங்களில் எளிதாக நடக்க உதவும் வகையிலேயே இந்த சேர்க்கை கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் காலை இழந்த மேலூரைச் சேர்ந்த பிரபு, விருதுநகரைச் சேர்ந்த கங்கை முருகன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரகுமார் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கால் அகற்றப்பட்ட குருவித்துறையைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தற்போது நான்கு பேருக்கும் செயற்கைகால் பொருத்தப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முடநீக்கியல் துறை பிரிவு மூலம் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளதாக அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.