ETV Bharat / state

'தமிழின் தொன்மையை கோயில்களில் தேட அரிய வாய்ப்பு' - அமர்நாத் ராமகிருஷ்ணன் பெருமிதம் - இந்திய தொல்லியல் துறை

தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மையை கோயில்களில் தேடுவதற்கான அரிய வாய்ப்பாக இந்தப் பணியிட மாற்றத்தைக் கருதுகிறேன். இந்தத் துறையில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா
அமர்நாத் ராமகிருஷ்ணா
author img

By

Published : Sep 14, 2021, 6:33 PM IST

Updated : Sep 14, 2021, 7:50 PM IST

மதுரை: அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற இந்தப் பெயரை தமிழர்கள் ஒருபோதும் மறக்க இயலாது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடத்தியதுடன், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ததில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளையும் முழுவதுமாக மக்கள் மையப்படுத்தி, அதன் பெருமைகளை உலகமெலாம் கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர். பல்வேறு காரணங்களுக்காக இந்திய தொல்லியல் துறை அவரை அஸ்ஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. அங்கிருந்து கோவாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தனது பணியை மேற்கொண்டு வந்தார்.

மீண்டும் தமிழ்நாட்டில்..

இந்நிலையில் இந்திய தொல்லியல்துறை சென்னை வட்டத்திலுள்ள தென்னிந்திய கோயில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சற்றேறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் பணியாற்றவுள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களின் அடையாளம் கோயில்கள்

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக பேசுகையில், "இந்திய தொல்லியல் துறையால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் பணியால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அடையாளம் என்றால் அது கோயில்களும், அதன் கட்டமைப்புகளும் தான். இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை தொல்லியல் துறையால் ஆவணமாக்கப்பட்டிருந்தாலும், மேலும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

சங்ககால கட்டுமானங்களைக் கொண்ட கோயில்கள் தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் உண்டு. அவற்றில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலமாக தமிழ்மொழியின் பெருமை மட்டுமன்றி, தமிழர்களின் கோயில் கட்டடக்கலை குறித்து நாம் இன்னும் கூடுதலாக அறிந்து கொள்ள முடியும்.

புதிய பரிமாணம்

கோயில் ஆய்வுத்துறையிலும் பல்வேறு புதிய விஷயங்களை வெளிக்கொணர பணியாற்றுவேன். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள கோயில்கள் இத்துறையின் கீழ் வருகிறது. என்னுடைய தொல்லியல் பணியில் மற்றொரு பரிமாணமாக இது அமையும் என உளப்பூர்வமாக நம்புகிறேன்

நேற்று தான் (செப்.13) பணியிட மாற்றத்திற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றேன். தற்போது கோவாவில் இருக்கின்ற காரணத்தால் அடுத்த ஓரிரு வாரங்களில் சென்னை வந்து எனது பொறுப்பை ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வு மேற்பார்வையில், தென்னிந்திய கோயில்கள் குறித்த பல்வேறு கூடுதல் வரலாற்றுப் பெருமிதங்கள் தமிழர்களுக்கு மட்டுமன்றி, தென் மாநில மக்களுக்கும் கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் கட்டாயம் - உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்

Last Updated : Sep 14, 2021, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.