ETV Bharat / state

'டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்திருக்கிறார்கள்'- இல. கணேசன் - political news in tamil

டெல்லி போராட்டத்தில் சில சமூக விரோதிகள் புகுந்திருக்கிறார்கள் என பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

bjp leader l ganesan
'டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்திருக்கிறார்கள்' இல. கணேசன் குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 6, 2020, 10:02 PM IST

மதுரை: திருச்செந்தூரில் நிறைவுபெறும் வேல் யாத்திரையில் பங்கு கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோர் மதுரை விமான நிலையம் வந்தனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன், "டெல்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நடுவில் உள்ள தரகர்கள் நடத்திவரும் போராட்டம்.

'டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்திருக்கிறார்கள்' இல. கணேசன்

அதிலும் கூட சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து இருக்கிறார்கள். காலிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

விவசாயிக்கும், காலிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதால்தான் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

வருகிற 9ஆம் தேதி விவசாயிகளை சந்திக்கவுள்ளோம். விவசாயிகளுக்கு புரிய வைத்து நல்ல தீர்வை எட்டுவோம். வேளாண் திருத்தச் சட்டங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடையாது" என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து அர்ஜுன மூர்த்தி குறித்து பேசிய அவர், “அர்ஜூன மூர்த்தி புதிதாக பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஒரு பொறுப்பு தந்திருந்தோம்.

தற்போது ரஜினியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால், எங்களுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் சரி, யார் கட்சி தொடங்கினாலும் சரி பாஜகவுக்கு பாதகம் கிடையாது” என்றார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.