மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைரஸ் தொற்று பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அச்சோதனையில் மேலும் ஒரு மாணவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று கண்டறியப்பட்ட மாணவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில், வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு முன் உடனடியாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கல்லூரியை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊழியருக்கு கரோனா! - காமராஜர் பல்கலைக்கழகம் மூடல்!