ETV Bharat / state

தேர்தல் நேரத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு - அன்புமணி ராமதாஸ்

நீட்தேர்வு, குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், மாதந்தோறும் மின் கட்டணம் என தேர்தல் பரப்புரை நேரத்தில் திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அவையனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 4, 2023, 11:04 PM IST

தேர்தல் நேரத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

மதுரை: தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.04) நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக அதிமுக பற்றி தானே கேட்க போகிறீர்கள்? முதலில் நான் சொல்வதை கேளுங்கள், பின்பு உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

அப்போது பேசிய அவர், ”புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமை செயல் மிக தவறானதாகும். அடித்தட்டு மக்கள் முன்னுக்கு வர வேண்டும்.

ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட சூழல் இன்று மாறியுள்ளது. ஆனால், போதுமான வேகம் இல்லை. தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஷா மையத்திற்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு சலுகைகள் கொடுக்கிறார்கள்? காடுகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதற்காக விதிவிலக்கு? சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். அங்கு நடைபெற்ற இளம்பெண் தற்கொலை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அந்த மையத்தி சார்ந்தவர்கள் காவிரியை பாதுகாப்பதாகவும் மரம் நடுவதாகவும் அவர்கள் வசூலித்த பணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் உள்ளது. நாங்கள் நடுவில் நாகரீகமான வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாக கூட்டணி குறித்து அறிவிப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வகையில் வியூகம் அமைப்போம்.

தமிழ்நாட்டில் அதிகம் இளைஞர்கள் உள்ள கட்சி எங்கள் கட்சி. கட்சியை பலப்படுத்தும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளோம்” என்றார். பாமக குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயக்குமார் சொல்லும் கருத்துக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. எடப்பாடி சொன்னால் பதில் சொல்வேன்" என்றார்.

தமிழக அரசு கடந்த 3 மாதத்தில் ரூ.53,000 கோடி கடன் வாங்கி உள்ளது. மொத்த கடன் ரூ.6,43,000 கோடியாக உள்ளது. இதற்காக வருடம் தோறும் 48,000 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறார்கள். 55 வருடமாக தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக திராவிட ஆட்சிகள் இன்னும் மது விற்பனையை நம்பி தான் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். இது தான் திராவிட மாடலா?” என்றார்.

இதையும் படிங்க: நீட் வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு ஏமாற்றுகிறது - ஈபிஎஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.