ETV Bharat / state

தூத்துக்குடியில் கைபற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி: துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கறிஞரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கைபற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை சமர்பிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!
author img

By

Published : Mar 21, 2019, 6:03 PM IST

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் ஒரு காவலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மதுரை நாகனகுளத்தைச் சேர்ந்த கார்மேகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தூத்துக்குடியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிகாரிகளிடமிருந்து 8 அமெரிக்க வகைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அந்த துப்பாக்கிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக இருப்பகாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி தற்போது அபாயகரமான பகுதியாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எட்டு துப்பாக்கிகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற சரசுதாரர் ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை நாகனகுளத்தைச் சேர்ந்த கார்மேகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழகத்தில் சட்ட விரோத கள்ளத் துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் 1 காவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய ஆயுத தடைச் சட்டத்தின் படி  முறையான உரிமம் பெற்றவர்களே துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக கள்ளத்துப்பாக்கி புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.  வட மாநிலங்களிலேயே கள்ளத்துப்பாக்கி வழக்கம் அதிகமிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் வட மாநிலங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்துகளில் கள்ளத் துப்பாக்கிகள் கொணரப்பட்டு சில அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன. ஆகவே,இவற்றை முடிவுக்கு கொணர சட்ட விரோத, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை  தேசிய புலனாய்வுப் முகமைக்கு மாற்றவும், அது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இந்த  வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ss சுந்தர் அமர்வு, 
தூத்துக்குடியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகள் எங்கு உள்ளன? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தூத்துக்குடி தற்போது அபாயகரமான பகுதியாக உள்ளது என கருத்து தெரிவித்து, வழக்கறிஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எட்டு துப்பாக்கிகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற சரசுதாரர் ஏப்ரல் 4இல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.  துப்பாக்கி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருகையில், சிரசுதாரருக்கு தூத்துக்குடி ஆயுதப்படை டிஎஸ்பி தலைமையில் உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.