நெஞ்சுவலி காரணமாகச் சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள், திரைப் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும், அவருடைய நண்பர்களும் விவேக்கின் படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடிகர் விவேக் 1978 முதல் 1981ஆம் ஆண்டுவரை இளம் வணிகவியல் பயின்றார். பின்னர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
![American college](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-actor-vivek-american-college-script-7208110_17042021123848_1704f_1618643328_721.jpg)
கல்லூரியில் நண்பர்களோடு கதை பேசிக் கொண்டும், நாடகத்தில் நடிப்பதற்காக ஒத்திகை செய்துகொண்டும், இளமைத் துடிப்புடன் திகழ்ந்தவர் நடிகர் விவேக் என அவரை அறிந்த அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்