ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வெற்றிபெறும் காளைக்கும், காளையருக்கும் பரிசுகளை வழங்கவுள்ள இபிஎஸ், ஓபிஎஸ்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடு பிடிவீரருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பரிசு வழங்கி மாண்பு செய்யவுள்ளனர்.

Alankanallur Jallikattu: EPS, OPS gives  prizes to the winning bull and Players
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வெற்றிபெறும் காளைக்கும், காளையருக்கும் பரிசுகளை வழங்கவுள்ள இபிஎஸ், ஓபிஎஸ்!
author img

By

Published : Jan 16, 2021, 4:53 AM IST

தமிழர் புத்தாண்டான தைப் பொங்கல் திருநாள் விழாவாக தமிழ்நாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அத்துடன், பொங்கல் திருநாளின் மிக முக்கிய நிகழ்வான தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் முதலான ஜன.14ஆம் தேதி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தன. மூன்றாம் நாளான இன்று (ஜன.16) உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக கால்கோல் நடும் நிகழ்ச்சி நேற்று (ஜன.15) நடைபெற்றது. அதில் பங்கேற்கவுள்ள மாடுகளை தயார்படுத்தும் இறுதிக்கட்ட பயிற்சிப் பணியில், அவற்றை வளர்ப்பவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து ஆவேசத்துடன் சீறிப் பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும், அவர்களைக் கலங்கடித்து ஓட வைக்க காளைகளையும் தயார்படுத்தும் பயிற்சிகள் பல்வேறு கிராமங்களில் களைகட்டிவருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளதாக விழா குழு அறிவித்துள்ளது. அத்துடன், போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடு பிடி வீரருக்கும், காளைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தலா ஒரு மகிழுந்தை (கார்) வழங்கி மாண்புசெய்ய உள்ளனர்.

Alankanallur Jallikattu: EPS, OPS gives  prizes to the winning bull and Players
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வெற்றிபெறும் காளைக்கும், காளையருக்கும் பரிசுகளை வழங்கவுள்ள இபிஎஸ், ஓபிஎஸ்!

காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, எல்இடி டிவி, பிரிட்ஜ், பைக், மிக்சி, சைக்கிள், கட்டில், மெத்தை போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணியளவில் நிறைவடைய உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை 800 காளைகளும், 655 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். வீரர்களைப் பரிசோதனை செய்வதற்காகவும், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை வழங்கவும் 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ்கள் பத்து களமருகே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசிப்பதற்காக அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பெரிய திரைகள் கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முகநூல், யூ ட்யூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்பட உள்ளன.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையையொட்டி ஏறக்குறைய 3 ஆயிரம் காவல்துறையினர் அலங்காநல்லூர் முழுவதும் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தயாராகிவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.