கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த பல்வேறு திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நிறைவுற்று, கடந்த நான்கு மாதங்களாகத் திரையிட முடியாமல் இருந்தது. தொடர்ந்து, இப்படத்தினை வரும் அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தின் மூலமாக வெளியிட உள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்தார்.
இந்தச் சூழலில், ”அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வலிமை' திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் வரை மற்ற திரைப்படங்கள் எதையும் திரையரங்குகளிலோ, ஓடிடி தளங்களிலோ பார்க்க மாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்று, அஜித் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ’அடங்காத அஜித் குரூப்ஸ்’ எனும் பெயரில் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தியேட்டர்ல 'வலிமை' மட்டும்தான் பாப்போம் - போஸ்டர் ஒட்டி உறுதிமொழி எடுத்த தல ரசிகர்கள்! - Valimai release
மதுரை : திரையரங்கில் 'வலிமை' திரைப்படத்தைத் தவிர மற்ற படங்களை பார்க்க மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உறுதிமொழி எடுத்துள்ளனர்.