மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் அருகில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ”நல்லவர் ஆட்சி செய்தால் மூன்று பருவங்களில் மழை பொழியும். ஆண்டவனே ஆட்சி செய்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின்போல் குறையை மட்டும் கூறும் நபர் இருக்கத்தான் செய்வார்கள்.
முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கொடுப்பதை எதிர்த்து திமுகவினர் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். எதிர்க்கட்சியிலிருக்கும் போது பெட்டிக்குள் இருக்கும் பாம்பு போல் இருப்பார்கள். ஆட்சிக்கு வந்தால் படமெடுத்து ஆடுவார்கள். திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியபோது கட்சியின் சின்னம் அச்சுட்ட்ய் கொடுத்தனர்.
ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில், தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது. எனவே மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ’ஜெயலலிதா எப்படி இறந்தார் என எடப்பாடி பழனிசாமி இந்தப்பக்கம் வந்தால் கேளுங்கள்’ - உதயநிதி பளீர்