ETV Bharat / state

தித்திக்கும் பொங்கலுக்குத் தயாராகும் மதுரை 'மண்டை வெல்லம்'..! - தைப் பொங்கல்

Jaggery Balls preparation for Pongal Festival: தமிழர் திருநாளான தித்திக்கும் தைப் பொங்கலை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கரும்பு ஆலைகளிலும், தற்போது விறுவிறுப்பாக 'மண்டை வெல்லம்' தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த சிறப்புத் தொகுப்பினைக் காணலாம்..

ahead of pongal festival jaggery prepration intense in madurai
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:47 PM IST

தித்திக்கும் பொங்கலுக்குத் தயாராகும் மதுரை 'மண்டை வெல்லம்'..!

மதுரை: தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க திருநாளாகக் கருதப்படும் தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கரும்பு ஆலைகளில் 'மண்டை வெல்லம்' தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருநீறு, குங்குமம் பூசிய வெங்கலப் பானையின் இருபுறமும் கரும்பை நிறுத்தி, புதுப்பச்சரிசியை உலையில் இட்டு, மண்டை வெல்லம், சுக்கு, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து, நுரை பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று குரலெழுப்பி, குலவையிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் படையலிட்டு வணங்கி மகிழ்வது தான் தைப் பொங்கல் திருநாள்.

பொங்கலோடு வடை, முறுக்கு உள்ளிட்ட பிற பலகாரங்களையும் தட்டில் வைத்து அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுமென நினைக்கும் இந்த உன்னதத் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு கரும்பு ஆலைகளில் தற்போது மண்டை வெல்லம் காய்ச்சும் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மதுரை மாவட்டம் தனிச்சியம் அருகேயுள்ள அய்யன கவுண்டன்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் பணியாற்றும் நாகலெட்சுமி கூறுகையில், "பொதுவாகவே எங்களது கரும்பு ஆலையில் வெல்லம் காய்ச்சும் பணியானது இருந்து கொண்டே இருக்கும். எங்களுடைய ஆலையிலிருந்து மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கேரளா செல்லும். காய்ச்சும் பாகிலிருந்து அழுக்கு நீக்குவதற்காகச் சோடா மட்டுமே பயன்படுத்தப்படும்.

வேதிப்பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதில்லை. தரப் பரிசோதனை செய்யப்பட்டுதான் ஏற்றுமதி செய்யப்படும். எங்களுடைய ஆலையில் தயாரிக்கப்படுவது ஒரிஜினல் வெல்லம்" எனத் தெரிவித்தார். இங்குள்ள ஒவ்வொரு ஆலைகளுக்கும் சீனிக்கரும்பு என்று சொல்லக்கூடிய கரும்புகள் வரவர உடனடியாக அவை, அனைத்தும் அரைக்கப்பட்டு சாறு எடுக்கப்படுகிறது.

அரைவை இயந்திரத்திலிருந்து அமைக்கப்பட்ட குழாய் வழியாக, சற்றே பெரிதாக அமைக்கப்பட்ட கொப்பரைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே நல்ல கொதிநிலையில் காய்ச்சப்படுகிறது. பாகு பதத்தில் கொதிநிலை வருவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆகிறது. இதுகுறித்து, கரும்பு கொண்டு வரும் வாகனத்தின் ஓட்டுநரான ராஜா கூறுகையில், "மேலூரிலிருந்து எங்களது ஆலைக்குத் தேவையான கரும்புகள் கொண்டு வரப்படுகின்றன.

அய்யன கவுண்டன்பட்டியில் மட்டும் மூன்று ஆலைகள் உள்ளன. பொங்கல் மட்டுமன்றி ஆண்டு முழுவதுமே இந்த ஆலையில் பணி இருந்து கொண்டே இருக்கும். கொப்பரையிலிருந்து பாகு பதத்தில் மற்றொரு கொப்பரையில் கொட்டப்படும். அதனை உருண்டையாகப் பிடிப்பதற்குப் பெண் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் உருண்டை பிடித்த பிறகுச் சாக்குப் பையில் கட்டப்படும். ஒரு நாளைக்கு ஆறு கொப்பரை வரை காய்ச்சப்படும்.

ஒரு கொப்பரை சுமாராக 80 கிலோவில் இருந்து 90 கிலோ வரை இருக்கும். கரும்பைப் பொறுத்து அளவு மாறும். மதுரை கமிஷன் கடையிலிருந்து கேரளா மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் கூட இந்த மண்டை வெல்லங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேரளாவில் அதிக அளவு மண்டை வெல்லம்தான் பயன்படுத்துகின்றனர். அஸ்கா சீனியை அவர்கள் பயன்படுத்துவதில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆலையின் மற்றொரு பணியாளர் செந்தில்குமார் கூறுகையில், "பொங்கலுக்கு மிகத் தேவையான நாட்டு வெல்லம் இங்குத் தயாராகிறது. தற்போது தமிழக அரசே சர்க்கரை வழங்குவது குறித்து அறிவிக்கிறது. ஆகையால் பொங்கல் சீசனில் வெல்லம் அடிப்படைத் தேவையாக உள்ளது. எங்களுடைய சொந்தக் கரும்பு போதாவிடில், விலைக்கும் வாங்குகிறோம். கரும்பு அரைத்த சாற்றினை பெரிய கேனுக்குக் கொண்டு வந்து அங்குச் சோடா, ஹைட்ரோ சல்பேட் உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் சேர்த்தால்தான் பாகாக நமக்குக் கிடைக்கும். தனி கரும்புச்சாறை இதுபோன்று கொண்டு வரவே முடியாது. முப்பது கிலோ கொண்ட சிப்பமாகக் கட்டப்பட்டு மதுரைக்கு அனுப்பப்படும். வழக்கமான நாட்களில் விலை குறைவாக இருக்கும். ஆனால், பொங்கலை ஒட்டி விலை அதிகமாகக் கிடைக்கும். இதைக் கணக்கில் கொண்டுதான் கரும்பு நடப்படுகிறது.

மார்கழி மாதம் வெட்டுக்கு வந்தால்தான் கரும்பு விவசாயிகளுக்குக் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். பிற நாட்களில் கிலோவுக்கு ரூ.35 என்றால், பொங்கலை ஒட்டி ரூ.50க்கு விற்பனை ஆகும். எங்களது ஆலையில் தயாராகும் நாட்டு வெல்லம், கேரளாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட இந்த வெல்லத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

சேலத்தில் இருந்தும் வெல்லம் செல்கிறது. அது சற்று வெண்மையாக இருக்கும். ஆனால், எங்களது வெல்லம் பழுப்பு நிறத்தில் இருக்கும். எங்களது வெல்லம்தான் அதிகமாகக் கேரள மக்களால் விரும்பப்படுகிறது. எங்களுக்குக் கேரளாவில்தான் ஆண்டு முழுவதும் அதிக தேவை உள்ளது. அவர்களுடைய ஓணம் பண்டிகையின்போது எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதேபோன்று தமிழ்நாட்டில் பொங்கலின் போது எங்களது வெல்லத்திற்கு நல்ல விலை கிடைக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை புத்தகக் கண்காட்சி.. வாசகர்களை கவரும் புதிய அரங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.