ETV Bharat / state

' மிஸ்டர் ஸ்டாலின்! கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர  உங்களிடம் வேறு என்ன இருக்கிறது'

author img

By

Published : Mar 4, 2020, 1:49 PM IST

Updated : Mar 4, 2020, 2:51 PM IST

மதுரை: 'தியாகம் பண்ணுகிற கூட்டம் இங்கிருக்கிறது. நீங்கள் என்ன கிழித்துள்ளீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்? கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன இருக்கிறது உங்களிடம்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுடப்பட்டு காயம்பட்டிருந்த சமயத்தில், எம்ஜிஆரிடம் கருணாநிதி ஆதரவு தரும்படி கேட்டார். இதனால்தான் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். எம்ஜிஆர் செய்த தவறு அதுதான். அன்றைக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் இருந்திருந்தால் கருணாநிதியின் கதை முடிந்திருக்கும்.

எந்தவித குற்றச்சாட்டும் சொல்ல முடியாத அளவிற்கு சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி சதவிகிதம் ஒரு விழுக்காடுதான் வித்தியாசம். குடியாத்தம் தொகுதியில் ஆட்டோமேட்டிக் வெற்றிபெற்றது அதிமுகதான். இதைத் தெரிந்துகொண்ட அதிர்ச்சியால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் நெஞ்சு வலியால் இறந்திருப்பார் என நினைக்கிறேன்.

திமு.கவில் ஸ்டாலின் தலைமையில் இணைந்த ராஜகண்ணப்பன், கண்ணகி பிறந்த மண்ணிலிருந்து கேட்கிறேன் இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமா என்று கேட்பது அர்த்தமற்ற கேள்வியாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் சகோதரி லீலாவதி கொலைசெய்யப்பட்டார்களே அதற்கு நீதி கேட்பதுதானே நியாயம். தினகரன் பத்திரிகை அலுவலகம் கொளுத்தப்பட்டு, மூன்று பேர் கொலைசெய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கப் பெற்றதா? தெய்வம் இருந்தால் இவர்கள் நாசமாகப் போகட்டும்.

தியாகம் பண்ணுகிற கூட்டம் இங்கிருக்கிறது. நீங்கள் என்ன கிழித்துள்ளீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்? கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன இருக்கிறது உங்களிடம்” என்றார்.

மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இதனை, தற்போது ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டு, ’எங்களிடமிருந்து சிறுபான்மையினர், இஸ்லாமியர்களைப் பிரிக்க வேண்டும்’ என்று போராடிவருகிறார்.

மதுரையில் மருத்துவமனைகள் அதிகமாக இருந்தால்தான், அருகாமை மாவட்டத்திலிருந்து வரும் நோயாளர்களுக்கு பிணிகள் தீரும். தொட்டில் குழந்தைத் திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் ஏற்றப்படும். இதில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பரிசீலனையில் இருந்துவருகிறது. இது குறித்து, முதலமைச்சர் வரும் 24ஆம் தேதி அறிவிக்க உள்ளார்" என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இதையும் படிங்க: காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு தேசிய விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

Last Updated : Mar 4, 2020, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.