மதுரை: குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல் பிடுங்கி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை கைது செய்யப்பட்ட விவகாரம் மருத்துவ பரிசோதனை, சிறையில் அடைத்த சிறை சான்று மற்றும் அம்பாசமுத்திர ஜேஎம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விவரங்களை தனக்கு தர உத்தரவிடக்கோரி பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் காவல் துறையினர் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள். எனது 4 பற்களும் உடைக்கப்பட்டன பிறகு இந்த வழக்கில் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதியபட்ட வழக்கு விவரங்களை தர உத்தரவிட கோரி அம்பாசமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே, அம்பாசமுத்திர நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் தர உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கின் நேற்றைய விசாரணை இப்போது அம்பாசமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் விசாரணை விவரங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்.21 ) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் அருண்குமார் கூறியுள்ள ஆவணங்களில் முதல் தகவல் அறிக்கை கைது ஆவன குறிப்பு, மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க பிறப்பித்த ஆவண நகல் ஆகியவை தருவதாக கூறினார்.
மற்றபடி மற்ற வழக்குகளின் விவரங்களை அருண்குமார் தருவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'இப்படி' செய்தால் யாருக்கு ஆதரவு இல்லை எனத்தெரியும்? - க்ளூ கொடுத்த ஓபிஎஸ்