ETV Bharat / state

ஆதித்யா எல்1 விண்கலம் எப்போது லெக்ராஞ்ச் புள்ளியை அடையும்? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்! - ஸ்ரீஹரிகோட்டா

Aditya-L1: ஆதித்யா L1 விண்கலம் ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட நாளில் L1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி உள்ளார்.

ISRO Chief Somnath
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
author img

By ANI

Published : Oct 15, 2023, 10:51 AM IST

மதுரை: இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, “சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் திட்டமான ஆதித்யா L1 விண்கலமானது, ஜனவரி மாத்தின் நடுவில் L1 புள்ளியை அடையும். ஆதித்யா L1 விண்கலத்தின் செயல்திறன் நன்றாக உள்ளது” என்றார்.

  • #WATCH | Madurai, Tamil Nadu: ISRO chief S Somanath says, "Test Vehicle-D1 mission is scheduled for October 21. So this is Gaganyaan program. The Gaganyaan program requires testing, demonstrating the crew escape system. Crew escape system is a very critical system in Gaganyaan.… pic.twitter.com/hzjoRSSOVw

    — ANI (@ANI) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி சாதனை படைத்தது. அதேபோல், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா L1 என்ற விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆதித்யா L1 விண்கலம், 110 நாட்கள் பயணமாக சூரியனின் L1 பகுதிக்குச் சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பூமியில் இருந்து 1.5 லட்சம் கி.மீ தூரம் பயணித்து, சூரியனின் L1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் எனவும், L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா L1 விண்கலம், விண்வெளியில் இருக்கும் காற்றில் உள்ள துகள்கள், அயனிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது” என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்தது.

தொடர்ந்து சோம்நாத் கூறுகையில், ‘ககன்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முதல்கட்ட சோதனை அக்.21இல் நடைபெறும். மேலும், இந்த சோதனையில், விண்கலம் விண்ணை நோக்கி பயணிக்கும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இரண்டு கிலோ மீட்டர் முன்னதாக ராக்கெட்டில் இருந்து விண்வெளி வீரர்கள் வெளியேறுவதற்கான சோதனையும் நடத்தப்படுகிறது.

மனிதர்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ தொலைவில் கொண்டு சென்று, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம் ககன்யான் திட்டமாகும். ககன்யான் விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும் கடல் பகுதியில் விழும் விண்கலத்தை இந்திய கடற்படையினர் மூலம் மீட்கப்படும். மேலும், ஜனவரிக்கு முன் 4 முதல் 5 ஏவுகனைகள் இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க:ஆபரேஷன் அஜய்; இஸ்ரேலில் இருந்து தொடர்ந்து இந்தியர்கள் தாயகம் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.