ETV Bharat / state

தீண்டாமைச் சுவர்களை அகற்றுங்கள் - மதுரையில் மனு அளித்த ஆதித்தமிழர் கட்சியினர் - mettupalayam issue

மதுரை: தமிழ்நாட்டிலுள்ள தீண்டாமை சுவர்களை அகற்ற வேண்டும் என ஆதித்தமிழர் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆதித்தமிழர் கட்சி
ஆதித்தமிழர் கட்சி
author img

By

Published : Dec 4, 2019, 10:20 PM IST

இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது ஒரு உயிருக்குப் போதுமானது அல்ல. அதனால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

ஆதித்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

அங்கே நீதி கேட்டு போராடிய தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தீண்டாமைச்சுவர்களையும் அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும். இப்படி போராட்டம் நடத்தும் எங்களை காவல் துறையினர் கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் காவல்துறையினர் கைவிட வேண்டும். 17 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்றார்.

Intro:*தமிழகத்திலுள்ள அனைத்து தீண்டாமைச் சுவர்களையும் தமிழக அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும்*

*ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு*Body:*தமிழகத்திலுள்ள அனைத்து தீண்டாமைச் சுவர்களையும் தமிழக அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும்*

*ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு*

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அது ஓர் உயிருக்கு போதுமானது அல்ல அதனால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தினருக்கு அரசு வேலை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

அங்கே நீதி கேட்டு போராடிய தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தீண்டாமைச்சுவர் களையும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும்.

இப்படி போராட்டம் நடத்தும் எங்கள் மீது காவல்துறையினர் இரவு எங்களை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர் இவற்றையெல்லாம் காவல்துறையினர் கைவிட வேண்டும்.

17 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று என்று கூறினார்.

பேட்டி :
கார்த்திக் ஆதித்தமிழர் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.