ETV Bharat / state

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்தில் வருமானம் உயர்வு - மதுரை கோட்டம்

மதுரை ரயில்வே கோட்டத்தின் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்தில் சாதனை

author img

By

Published : Oct 10, 2022, 10:41 PM IST

மதுரை ரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவையும் வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சரக்கு போக்குவரத்து வாயிலாக மதுரை கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 170 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 128.44 கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆறு மாத கால சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 413 சரக்கு ரயில்களில் மதுரை கோட்டத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இது 614 சரக்கு ரயில்களாக உயர்ந்துள்ளது. இந்த அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்த தெற்கு ரயில்வே அளவில் சரத்து போக்குவரத்து வருமானம் ரூபாய் 1,766 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த வருட அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதமும் ரயில்வே வாரியம் நிர்ணயத்த இலக்கை விட 38 சதவீதமும் அதிகமாகும்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு மையங்கள் குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.