ETV Bharat / state

ஊராட்சி மன்ற தலைவர் கடத்தப்பட்டதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை துணைத்தலைவர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

petition
petition
author img

By

Published : Oct 20, 2020, 4:17 PM IST

தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிக்கும் செயல்கள் கடந்த சில நாள்களாக அதிகமாக நடந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், தேசிய கொடியேற்ற விடாமல் அவமதிக்கப்பட்டார். இதனிடையே கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பொதுக்கூட்டத்தின்போது தரையில் அமர்த்தப்பட்டார்.

மயிலாடுதுறையில் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி சுழல் நாற்காலியில் அமர்வதற்கு கடும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள நாடார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷை துணைத் தலைவர் பிரதீப் என்பவர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

துணைத் தலைவர் பிரதீப் தனது சகோதரிக்கு ஊராட்சி செயலாளர் பதவி பெற வேண்டும் என்பதற்காக ஊராட்சி தலைவரை கடத்திச் சென்றதாக அக்கிராம மக்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

கடந்த நான்கு நாள்களாக ஊராட்சி மன்றத் தலைவரை காணவில்லை என உசிலம்பட்டி தாலுக்கா அலுவலகத்தில் புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இலவச நீட் கோச்சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.