மதுரை: மதுரை - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் கோவையில் இருந்து கிளம்பி நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர், பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு விட்டு, காலி ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க ரயில் சென்றது. அபோது கடைசி பெட்டி மட்டும் திடீரென தடம் புரண்டது.
இதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு, மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்க போராடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் ரயிலை நிலை நிறுத்தினர். பின்னர் ரயில்வே துறையினர் பெட்டியை யார்டு பகுதியில் இருந்து ரயில் பெட்டி பராமரிப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தடம் புரண்ட சம்பவம், மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ரயில் பெட்டி தடம் புரண்ட பகுதிதான், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, தற்போது தடம் புரண்ட ரயில் கண்ணூர் - பெங்களூரு இணைப்பு ரயில் ஆகும்.
ஆகையால் தடம் புரண்ட கடைசிப் பெட்டியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பெட்டிகளுடன் பயணிகள் ரயில், ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு & காஷ்மீரில் ராணுவத் தாக்குதலின் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!