மதுரை: மாநகர் சிவகங்கை சாலையில் அமைந்துள்ள சாத்தமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்த பெரியவர் உடல் நலம் குன்றி கவனிப்பாரற்று சாலையோரம் படுத்து கிடந்தார். இதுகுறித்து மாநகர குற்றத் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், அண்ணா நகர் காவல் நிலையம் ஆய்வாளர் சாது ரமேஷ் மிக விரைந்து செயல்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பெரியவரை காப்பாற்றி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது மருத்துவமனையில் நலமுடன் உள்ள அந்த பெரியவரை உரிய நேரத்தில் காப்பாற்றிய ஆய்வாளர் சாது ரமேஷ் மற்றும் அவரோடு துணை நின்ற அண்ணா நகர் காவல் நிலையம் போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:Covid 19: சீனாவில் கரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலி - அதிர்ச்சித் தகவல் வெளியீடு...