மதுரையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகள், மதுரை பாண்டிகோவில் அருகே மருந்து பாட்டில்கள், கரோனா தடுப்பு கவச உடைகள், ஆக்ஸிஜன் வழங்கும் குழாய்கள் போன்ற மருத்துவக் கழிவுகளை சாலையோரங்களில் மூட்டையாக கொட்டிச் செல்கின்றன.
மருத்துவக் கழிவுகளை அகற்றும் விதிகளை கடைபிடிக்காத தனியார் மருத்துவமனைகளின் இந்த அலட்சிய போக்கு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், கே.கே.நகர், அண்ணாநகர், 4 வழிச்சாலை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் இவ்வாறு அலட்சியமாக செயல்படுகின்றனவா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்திய மருத்துவமனையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பிறந்தநாள் வாழ்த்துகள் ‘கவுன்டர் கிங்’ கவுண்டமணி!