ETV Bharat / state

மதுரையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது - மதுரை

மதுரையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

லஞ்சம் வாங்கிய சர்வேயர்; கையும் களவுமாக பிடித்த காவல்துறை

author img

By

Published : Jul 29, 2022, 9:10 PM IST

மதுரை: முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷிடம் கேட்டுள்ளார். ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை ரமேஷ் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டி இடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும்..!' - பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.