மதுரையில் இன்று (செப்.28) புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேபோல் கோவையில் இன்று (செப்.28) 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,314ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,915ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 418ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.28) புதியதாக 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 4,768 பேர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4,106 பேர் கரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று (செப்.28) 93 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்டத்தில் மொத்தமாக 3,687 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 214 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,034 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
24 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த பெண்: நெகிழவைத்த இறுதித் தருணம்!