ETV Bharat / state

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு! - old man attempts self immolation

மதுரை: குடும்பப் பிரச்னை காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர் ஒருவரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

78 year old man attempts self immolation in madurai collectorate premises
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு!
author img

By

Published : Feb 25, 2020, 11:20 AM IST

மதுரை மாவட்டம் கருவேலம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (78). மில்லில் வேலை வேலை செய்து ஓய்வுப் பெற்ற பெருமாளுக்கு மனைவி இறந்து ஏழரை ஆண்டுகளான நிலையில் ராமநாதன், வீரபுத்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இரண்டு மகன்களும் பெருமாளுக்குச் சாப்பாடு போடாமல் அவரது சொத்தையும் அபகரித்ததோடு வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாகப் புகார் தெரிவித்த பெருமாள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரைக் காப்பாற்றி முதியவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு!

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இருவர் தீக்குளிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.