ETV Bharat / state

தேனி - மதுரை ரயில்: முதல் நாளே ரூ. 25 ஆயிரம் வருவாய்! - ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி

தேனியிலிருந்து இன்று மாலை புறப்பட்ட முதல் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் 634 பேர் எனவும் மொத்த வருவாய் ரூபாய் 25 ஆயிரத்து 751 எனவும் மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தேனி - மதுரை வந்த முதல் ரயிலில் 634 பேர் பயணம்

author img

By

Published : May 27, 2022, 11:01 PM IST

மதுரை: தேனி - மதுரை ரயில் சேவையை நேற்று (மே 26) காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை - தேனி புறப்பட்ட முதல் ரயிலில் 874 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் மொத்தம் 21 ஆயிரத்து 750 ரூபாய் வருவாய் பெறப்பட்டதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தேனி - மதுரை வந்த முதல் ரயிலில் 634 பேர் பயணம்

தொடர்ந்து இன்று (மே 27) மாலை தேனி - மதுரை புறப்பட்ட ரயிலில், 634 பேர் பயணித்துள்ளதாகவும், மொத்த வருவாய் 25 ஆயிரத்து 751 ரூபாய் எனவும் மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் தேனிலிருந்து 377 பயணிகளும் (ரூ.16,955), ஆண்டிப்பட்டியில் இருந்து 213 பயணிகளும் (ரூ.7,476), உசிலம்பட்டியில் இருந்து 44 பயணிகளும் (ரூ.1,320) மதுரைக்குச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை - தேனி ரயில் போக்குவரத்து: வியப்பிற்குரிய வரலாற்றுத் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.