ETV Bharat / state

மதுரையில் 6 கைக்குழந்தைகள் மீட்பு - 6 hand children rescued in Madurai

மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுத்த நபர்களிடம் இருந்து 6 கைக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

6 கை குழந்தைகள் மீட்பு
6 கை குழந்தைகள் மீட்பு
author img

By

Published : Sep 23, 2021, 5:24 PM IST

Updated : Sep 23, 2021, 5:54 PM IST

மதுரை: மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் கைக் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பான புகார்கள் பொதுமக்களிடமிருந்து குழந்தைகள் நல அமைப்பினருக்கும் காவல் துறையினருக்கும் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து விபசாரம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் குழந்தைகள் நல அமைப்பினருடன் இணைந்து கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இன்று (செப்.23) இறங்கியுள்ளனர்.

6 கைக்குழந்தைகள் மீட்பு

முதற்கட்டமாக, மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில்கள், காளவாசல் பகுதிகளில் பிச்சை எடுத்த நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கைக் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 300 கோடி போலி கணக்குகளை முடக்கிய பேஸ்புக்

Last Updated : Sep 23, 2021, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.