ETV Bharat / state

கடன் பிரச்னை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை! - 5 people suicide due to debt in madurai

மதுரை: உசிலம்பட்டி அருகே கடன் பிரச்னை காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

debt in madurai
உசிலம்பட்டி
author img

By

Published : May 11, 2021, 12:30 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.கே., தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(35). இவர் அங்குள்ள நகைக் கடைத் தெருவில், நகை பட்டறை தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கரோனா முழு ஊரடங்கு காரணமாக இவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடன் வாங்கி அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து தொழில் உத்திரவாதமும் இல்லாத நிலையில், வாங்கிய கடனை அடைக்கவும் முடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப தரும்படி சரவணனுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் தனது குடும்பத்தினருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சரவணன் அவரது மனைவி விஜி(24), மகள் அபி(5), மகாலட்சுமி(10), மகன் அமுதன்(6) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தற்கொலை

இந்த துயரச்சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.