ETV Bharat / state

கடவுளாக வணங்கப்படும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு! - சதிக்கல் கண்டுபிடிப்பு

மதுரை : நெல்பேட்டை அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல்லை ஆய்வாளர்களால் கண்டுபிடித்துள்ளனர்.

400 years ancient-middle-stone
400 years ancient-middle-stone
author img

By

Published : Oct 12, 2020, 10:10 PM IST

போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக ’நடுகல்’ அல்லது ’சதிக்கல்’ நடுவது பண்டைய மரபு. அந்த வகையில் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான நெல்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதிக்கல் ஒன்றை அப்உப்பகுதி மக்கள் கடவுளாக வணங்கி வருகின்றனர். இந்த நடுகல்லை கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம், தொல்லியல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் கண்டறிந்துள்ளனர்

மாவட்டத்தில் உள்ள கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும்போது முனிச்சாலை பகுதியில் உள்ள இந்த நடுகல் எனப்படும் சதிக்கல் கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்தில் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர், குலத்துக்காக, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்பவர்களின் நினைவாக நடுகல் அமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட நடுகல், போரில் உயிர் நீத்த வீரனுடன் அவனது மனைவியும் தீயேந்துதல் எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூலம் உயிரிழந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது நடுகல் அல்லது சதிக்கல் என்றழைக்கப்படுகிறது.

நடுக்கல்லின் வடிவமைப்பு

நீண்ட செவ்வக வடிவ பலகைக் கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் ஆடையணிகள், தலைக்கோலம் போன்றவற்றை கொண்டு ஆய்வு மேற்கொள்ளும்போது, இக்கல் ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும், நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. இக்கல்லில், போரில் இறந்த வீரன் தன் வலது கையில் ஓங்கிய வாளுடன் காட்சியளிக்கின்றான்.

இடது கையில் குறுவாளைப் பற்றிக் கொண்டு இடது தொடை மீது வைத்துள்ளான். கால்கள் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளன. வீரன் முகம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றான். அருகில் அவன் மனைவி உயிர்நீத்த மங்கையாக நிற்கிறாள். இருவருக்கும் இடதுபுறத்தில் பக்கவாட்டு கொண்டையலங்காரம் காட்டப்பட்டுள்ளன. காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளையும் இருவரும் அணிந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல பழமையான நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் மதுரை நகரின் மையப்பகுதியில் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உசிலம்பட்டி அருகே 500 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.