மதுரை: மதுரையில் உள்ள தனியார் கூரியர் சேவை மையம் மூலமாக, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் தனியார் கூரியர் சேவை நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் கூரியரானது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்டது எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலிக்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், கடத்தலில் தொடர்புடைய கண்ணன், பாண்டியராஜன், வாழகுரு, ரோஷன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர்.
தொடர்ந்து அவர்களது வாகனங்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 960 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதே பாணியில் வேறு யாரேனும் கடத்தலில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தாய்லாந்துக்கு கடத்தவிருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்