ETV Bharat / state

20 ஆண்டு கழிப்பறை வாழ்க்கை; அரசுக்கு கேட்டது ஏழை தாயின் அழுகுரல் - Pension

மதுரை: குடும்பத்தினரால் கைவிடப்பட்டு 20 ஆண்டுகளாக கழிப்பறையில் வசித்து வந்த மூதாட்டின் அவல நிலை குறித்து வெளியான செய்தியையடுத்து முதியோர் உதவித்தொகை வழங்க அரசு முன்வந்துள்ளது.

author img

By

Published : Aug 20, 2019, 6:03 PM IST

Updated : Aug 20, 2019, 6:31 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்தவர் மூதாட்டி கருப்பாயி (60). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட இவர், மதுரை அருகே அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தனது வாழ்க்கையை இன்றளவும் நடத்தி வருகிறார்.

யாருடைய ஆதரவும் இன்றி தனியாக தனது துயரம் நிறைந்த வாழ்க்கையோடு ஒவ்வொரு நாளும் வேதனை நிறைந்த பாதையில் பயணிக்கிறார். கழிவறை வளாகமே மூதாட்டிக்கு இன்றுவரை அடைக்கலமாக இருந்து வருகிறது.

மூதாட்டி கருப்பாயிடம் நமது செய்தியாளர் பேசிய போது, உறவினர் ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தேன் என்றார். மகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளும், தனது கணவர் இறந்து 17 ஆண்டுகளும் கடந்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

toilet life
முதியோர் உதவித்தொகைக்காக போராடிய ஏழை மூதாட்டி

ஆதரவு இல்லாமல் போனதோடு தனது எஞ்சிய வாழ்க்கையை இந்த கழிப்பறை கட்டடத்தில் தொடங்கியதாக கூறிய அவர், கட்டணக் கழிப்பறைக்கு வருபவர்கள் அளிக்கும் சில்லறை தொகையை வைத்து இந்த வளாகத்தை பராமரிப்பதோடு தனது அன்றாட வாழ்க்கை தேவையையும் பூர்த்தி செய்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் உதவித் தொகைக்காக ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாகவும், இன்று வரை அதற்காக போராடி வருவதாகவும் கூறினார்.

மூதாட்டி கருப்பாயி நிலையை உணர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது பற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, தற்போது இவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வருவாய் ஆய்வாளர் உறுதியளித்துள்ளார்.

அன்றாட பிழைப்புக்காக அவலம் நிறைந்த வாழ்க்கையை நடத்திவரும் இந்த ஏழைத் தாய்க்கு இன்று விடிவுகாலம் பிறந்துள்ளது. 20 ஆண்டுகால பெருந்துயர் வாழ்க்கை இனி சிறிய புன்னகையோடு கடந்து செல்லும் என எதிர்பார்க்கலாம்.

Intro:கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி - முதியோர் உதவித் தொகைக்காக ஏங்கும் அவலம்

குடும்பத்தாரால் உறவினர்களால் கைவிடப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சி கழிப்பறையில் வாழ்ந்து வரும் அவலம் முதியோர் உதவித் தொகைக்காக தற்போது வரை போராடி வருகிறார்.
Body:கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி - முதியோர் உதவித் தொகைக்காக ஏங்கும் அவலம்

குடும்பத்தாரால் உறவினர்களால் கைவிடப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சி கழிப்பறையில் வாழ்ந்து வரும் அவலம் முதியோர் உதவித் தொகைக்காக தற்போது வரை போராடி வருகிறார்.

மதுரை அருகே அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் 60 வயது தாழ்த்தப்பட்ட முதிய பெண்மணி கருப்பாயி வாழ்ந்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக யாருமற்ற அநாதையாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

இதுகுறித்து நமது etv bharat ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம் தான் எனது சொந்த ஊர் அங்கேயே பிறந்து எனது சொந்தக்காரர் ஒருவருக்கு வாக்கப்பட்டு வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை அவருக்கு திருமணம் முடித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என் கணவர் இறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன யாருமற்ற இந்நிலையில் நாங்கள் இந்த பகுதிக்கு வந்தோம் என் கணவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் அருகில் இருந்த இந்த கழிப்பறை கட்டிடத்திற்கு நான் குடி புகுந்தேன்.

இது கட்டண கழிப்பறை வளரும் என்பதால் இங்கு கடன் கழிக்க வருகின்ற அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது நாள் ஒன்றுக்கு 50 லிருந்து 70 ரூபாய் எனக்கு கிடைக்கும் இதில் மின்சார கட்டணம் கட்டி இந்த வளாகத்தை சுத்தமாக பராமரிப்பது எனது வேலையாகும் எனக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என் மகள் எங்கு இருக்கிறார் என்பது கூட எனக்குத் தெரியாது உறவினர்கள் சொந்தக்காரர்கள் என யாருடைய ஆதரவும் இல்லை இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதியோர் உதவித் தொகைக்காக ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டேன் இன்றுவரை முதியோர் உதவித்தொகை எனக்கு கிடைக்கவில்லை இங்கு கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் என் வாழ்க்கை பாடு ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.

கண்ணீரும் கம்பலையுமாக கழிவறைக்குள் தனது வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்ற கருப்பாயிக்கு அரசாங்கம் ஏதேனும் உதவி செய்தாகவேண்டும் ஆதரவற்ற பெண்மணி கருப்பாயிக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.Conclusion:
Last Updated : Aug 20, 2019, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.