ETV Bharat / state

மதுரையில் இரண்டு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி!

மதுரை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மதுரையில் இரண்டு மையங்களில் நடைபெறும் என மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி!

author img

By

Published : May 22, 2020, 5:17 PM IST

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மதுரை மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நடைபெற உள்ளது. வருகின்ற 27ஆம் தேதி முதல் இந்த பணிக்காக அந்தந்த பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடனடியாக வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதில் போக்குவரத்து வசதியின்மை காரணமாக சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவிவருகிறது.

இது குறித்து மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, “பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி போதுமான இடைவெளியுடன் கடைப்பிடிக்க உறுதி செய்யப்படும். மதுரை நகரிலிருந்து தேர்வு மையம் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் விடுவது தொடர்பாக போக்குவரத்து உயர் அலுவலர்களிடம் பேசி வருவகிறோம்.

தேர்வு மையங்களில் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பெயர் விவரங்கள், வீட்டு முகவரி ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாநகரில் எந்தெந்த பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்படும் என்ற விவரங்கள் பின்னர் தெரியப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோயம்பேடு சந்தையை உடனே திறக்க வேண்டும் - முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.