மதுரையில் அரசு இராசாசி மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாநகர், மாவட்டம், அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது.
இதுவரை 143 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (மே 17) மகராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து வந்த மூவர் உள்பட 13 பேர் புதிதாக வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 107 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை இருவர் மரணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி ரோபோ அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலமாக நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை வளாகம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - வடமாநிலத்தவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைப்பு