மதுரை மாநகரில் உள்ள மாப்பாளையம், கே புதூர், காஜியார் தோப்பு, விளாச்சேரி, தாசில்தார் நகர், காமராஜபுரம், டிபி ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து 13 பேர் மதப் பிரச்சாரம் செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் சென்றிருந்தனர்.
இதனிடையே, கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மதப் பிரச்சாரம் செய்யப்போன அந்த 13 மதபோதகர்களும் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
தொடர்ந்து, அவர்களுக்குப் பலகட்டங்களாக நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த 13 பேரும் தெலங்கானா அரசிடம் உரிய அனுமதி பெற்று அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஓட்டுநர்களின் துணையுடன் ஒரு வேன் மூலம் நேற்று மதுரை வந்தடைந்னர்.
இவர்களைப் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அலுவலர்கள் அவனியாபுரம் சின்ன உடைப்பு முகாமில் தனிமைப்படுத்தினர்.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!