மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கக் கட்டடத்தின் எதிரே உள்ள பல்நோக்கு மருத்துவமனை வளாகம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக இயங்கி வருகிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இங்கு 121 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இருவர் உயிரிழந்தனர், 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட மதுரையைச் சேர்ந்த ஆறு பெண்கள், நான்கு ஆண்கள் ஆகிய 11 பேர் பூரண குணமடைந்து நேற்று (மே.12) வீடு திரும்பினர்.
தற்போது, 32 நபர்களுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடியில் புதிய திட்டம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு