திடீரென்று இடி, மின்னலுடன் ஊத்தங்கரைப் பகுதியில், கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது தென்னை மரத்தில் மின்னல் தாக்கி எரிந்து கொண்டிருந்தது. அதனை வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தவர்கள்... இயற்கையின் கோரத்தாண்டவத்தால் பாதிப்பிற்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது ஊத்தங்கரை மூன்றாம்பட்டி ஊராட்சியில் வசித்துவந்த ராஜ்குமார் என்பவரது, வீட்டுத் தென்னைமரத்தில் மின்னல் தாக்கி மரம் எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து மரம் எரிந்துகொண்டிருந்ததால், அதை என்னவென்று குடும்பத்தினர் வெளியே வந்து பார்க்க வந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ராஜ்குமாரின் மனைவி உயிரிழந்தார். ராஜ்குமாரின் தங்கை படுகாயமடைந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் தங்கை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... மின்னல் தாக்கி நான்கு விவசாயிகள் படுகாயம்!