ETV Bharat / state

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திட்டம் 2020: கட்சிப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் - Voter Special Summary plan meeting

கிருஷ்ணகிரி: வாக்காளர் சிறப்பு சுருக்கம் முறை திட்டம் 2020 குறித்து அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Voter Special Summary plan meeting
Voter Special Summary plan meeting
author img

By

Published : Feb 1, 2020, 9:24 AM IST

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு சுருக்கம் 2020 குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மதிவாணன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

பின்பு வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் மதிவாணன் பேசும்பொழுது, இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 வாக்காளர் பட்டியலானது செம்மையாக பிழைகள் ஏதுமின்றி வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக மாவட்ட எல்லை, மாநில எல்லைகளில் உள்ள வாக்காளர்களைச் சரியாகக் கண்டறிந்து சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அனைத்து படிவங்களும் முறையாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கணினியில் பதிவேற்றம்செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் முகவர்கள், அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜனவரி 22ஆம் தேதிவரை பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளன என்றார்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் பெறப்பட்ட அனைத்து படிவங்களும் வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் அனைத்துக் கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்கும்பொழுது நகராட்சி, ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர் உள்ளதை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உரிய வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கொரோனா இல்லை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!

Intro:வாக்காளர் சிறப்பு சுருக்கம் முறை திட்டம் 2020 – குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம்.Body:வாக்காளர் சிறப்பு சுருக்கம் முறை திட்டம் 2020 – குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி வாக்காளர் சிறப்பு சுருக்கம் 2020 யொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் இன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பின்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மதிவாணன் அவர்கள் பேசும்பொழுது:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 – ல் வாக்காளர் பட்டியலானது செம்மையாக பிழைகள் ஏதுமின்றி வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. குறிப்பாக மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லைகளில் உள்ள வாக்காளர்களை சரியாக கண்டறிந்து சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து படிவங்களும்
முறையாக சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மேலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின்
முகவர்கள் மற்றும் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகள் மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கடந்த 22.01.2020 வரை பெறப்பட்ட
படிவங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் பெறப்பட்ட அனைத்து படிவங்களும் வரும் 03.02.2020 க்குள் சரிபார்க்கப்படவேண்டும். இதனை தொடர்ந்து வரும் 14.02.2020 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் முனைவர்.எம்.மதிவாணன் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் அனைத்து கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்கும்பொழுது: நகராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர் உள்ளதை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உரிய வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.