ETV Bharat / state

'பிகில்' வெறியாட்டம் - 18 விஜய் ரசிகர்கள் (புள்ளிங்கோ) கைது! - பிகில் பட வெளியீடு

கிருஷ்ணகிரி: பிகில் பட விவகாரத்தில் கடந்த 25ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக மேலும் 18 விஜய் ரசிகர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

vijay-fans-arrested
author img

By

Published : Nov 1, 2019, 11:50 PM IST

விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் சிறப்பு காட்சி திரையிடுவது தொடர்பாக கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் 32 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி சிறப்பு காட்சி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக்கூறி கிருஷ்ணகிரியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துக்களை சூரையாடி ரகளையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து ரோடு ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.

18 விஜய் ரசிகர்கள் கைது

மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த அதிவிரைவுப் படை காவல் துறையினர் விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று மேலும் 18 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பது கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் (புள்ளிங்கோ) மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...

'பிகில்' நடிகைகளுடன் அட்லி டிக்-டாக்! இணையத்தில் பரவும் வீடியோ

Intro:கிருஷ்ணகிரியில் பிகில் பட விவகாரத்தில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாகமேலும் 18 விஜய் ரசிகர்கள்(புள்ளிங்கொ) கைது.
Body:கிருஷ்ணகிரியில் பிகில் பட விவகாரத்தில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாகமேலும் 18 விஜய் ரசிகர்கள்(புள்ளிங்கொ) கைது.

கிருஷ்ணகிரியில் பிகில் பட விவகாரத்தில் கடந்த 25ம் தேதி தீபாவளி சிறப்பு கட்சி திரையிடப்படுதல் தொடர்பாக வன்முறையில் எடுபட்ட விஜய் ரசிகர்கள் 32 பேரைக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதுவரை பிகில் பட சிறப்பு காட்சி விவகாரத்தால் கிருஷ்ணகிரியில் நடந்த வன்முறை தொடர்பாக 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி சிறப்பு காட்சி தொடர்பாக கிருஷ்ணகிரியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் விஜய் ரசிகர்களின் அட்டகாசத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளாலான உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தது . ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன .சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் . இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்திருந்த நிலையில் இன்று மேலும் 18 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பது கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் (புள்ளிங்கோ) மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.