கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரை நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி சாலையில் விழுந்தது, அப்போது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க உடனடியாக பிரேக் பிடித்ததால் காருக்கு பின்னால் வந்த லாரி கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது அந்த கார் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பை தாண்டி கிருஷ்ணகிரி சாலையில் விழுந்த போது கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூளகிரி காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.