கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் பூதிகுட்டா என்னும் கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் 35 யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை விரட்டும் பணியில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, யானை ஒன்று வன ஊழியர்களை துரத்தியது. இதில், கர்நாடகாவைச் சேர்ந்த வன ஊழியர் முனியப்பா (55) என்பவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அதேபோல் யானைகள் கூட்டம் சென்றபோது எதிரே வந்த விவசாயி ஒருவரையும் தாக்கிக் கொன்றது. தற்போது இந்த யானைகள் பூதிகுட்டா வனப்பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ளன. வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி வன ஊழியர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சிங்கிளாக வலம்வரும் ஒற்றைக்கொம்பனை அதன் கூட்டத்தோடு சேர்த்துவிடுங்க'