ETV Bharat / state

ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - கிருஷ்ணகிரியில் லாரி ஓட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநருக்கும் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

லாரி ஓட்டுநரை தாக்கும் சிசிடிவி காட்சி
லாரி ஓட்டுநரை தாக்கும் சிசிடிவி காட்சி
author img

By

Published : Feb 26, 2020, 6:48 PM IST

Updated : Feb 26, 2020, 7:06 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி ஓட்டுநருக்கும், அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், கைகலப்பாக மாறிய தகராறு, லாரி ஓட்டுநரையும் நடத்துநரையும், சுங்கச்சாவடி ஊழியர்கள் இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் அடியாட்கள் போல் ஊழியர்கள் நடந்து கொள்வது வேதனையாக உள்ளது, என்றனர்.

லாரி ஓட்டுநரை தாக்கும் சிசிடிவி காட்சி

மேலும், இதுபோன்ற செயல்கள் நடப்பதை தடுக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டுநர்களுக்கும் நடத்துனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: போகலூர் சுங்கச்சாவடியில் நான்கு வழி சாலைக்கான சுங்க கட்டணம் வசூல் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last Updated : Feb 26, 2020, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.