பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட சிலர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சித்தாபுரா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லகனி, சுப்பிரமணியன் உள்ளிட்ட மூவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு சில்லறைகளாக மாற்ற 3 பேரும் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு