ETV Bharat / state

'பாண்டியநாடு' பட பாணியில் நடந்த கொலை - மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை - பழிக்குப் பழி

ஓசூர் அருகே தனது மகனைக் கொலை செய்த நபரை ‘பாண்டிய நாடு’ திரைப்பட பாணியில் பழி வாங்கிய தந்தை உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

krishnagiri
மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை
author img

By

Published : May 17, 2023, 10:12 AM IST

மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை: கிருஷ்ணகிரியில் நடந்த பகீரங்க சம்பவம்!

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த குருபட்டி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் கடந்தாண்டு (2022) ஜனவரி 1ஆம் தேதியன்று குருபட்டியைச் சேர்ந்த கட்டட பொறியாளர் மோகன்பாபு (24) என்பவரை குருபட்டியைச் சேர்ந்த திலக் (25) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது.

அதன் பின்னர் திலக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் பிணையில் வெளியே வந்த திலக், தான் கொலை செய்த மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி போலீசில் புகாராக கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஓசூர், பெரியார் நகரில் திலக் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார்.

hosur murder
கட்டட பொறியாளர் மோகன்பாபு (24)

அப்போது அவர் எதிர்பாராத நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திலக்கை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திகிரி இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்.ஐ. சிற்றரசு ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது இந்த கொலை குறித்து, ஓசூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது விஷால் நடித்த ‘பாண்டிய நாடு’ திரைப்படத்தில் பாரதிராஜா தனது மகனை கொலை செய்தவனை கூலிப்படை வைத்து கொலை செய்வது போல காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதே போல, ஓசூரிலும் ''பாண்டிய நாடு'' சினிமா பாணியில் மகனைக் கொன்ற நபரை தந்தையே கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டிய சம்பவம் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும், உயிரிழந்த மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், “ஒரே மகனை கொலை செய்துவிட்டு கொலையாளி வெளியே சுற்றியதை, தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கூலிப்படையைச் சேர்ந்த பலரை நாடிய போது செய்ய மறுத்ததாகவும், அதனால் தனது உறவினர்களான சிவக்குமார் (25), வெங்கடேஷ் (24) ஆகியோர் மூலம் திலக்கை தீர்த்துக்கட்ட மத்திகிரியை சேர்ந்த ஜிம் டிரெய்னர் சசிக்குமார் என்பவரைத் தொடர்புகொண்டு 20 லட்சம் ரூபாய் விலைபேசி, முன்பணமாக 2 லட்சம் ரூபாயை வழங்கியதாகவும் கூறினார்.

அதன் பிறகு சசிக்குமார் மற்றும் திம்மராயப்பா உறவினர்கள் சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் திலக்கை சுமார் ஒரு மாத காலமாக பின்தொடர்ந்து வழக்கமாக தினமும் டீ குடிக்கும் கடையில் திட்டமிட்டபடி தீர்த்து கட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திம்மராயப்பா, சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரை நகரபோலீசார் கைது செய்து, சசிக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் சசிக்குமார் சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்’’ என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சரணடைந்த சசிக்குமாரை போலீஸார் காவலில் எடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை கொன்றதற்காக தந்தையே பழி தீர்க்க களமிறங்கி, கூலிப்படை வைத்து கொலை செய்து விட்டு கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திம்மராயப்பா உள்ளிட்ட 3 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கிறார்' அதிமுக பேரூராட்சி துணைத் தலைவர் மீது கவுன்சிலர்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.