கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மேலுமலை வனப்பகுதியில் இருந்து 3 காட்டுயானைகள் வெளியேறி ஒரு மாதமாக சுற்றி வருகின்றன.நேற்றிரவு எண்ணேக்கோல் புதூர் வழியாக சென்ற யானைகள் இன்று காலை முதல் மாதேப்பட்டி கிராமத்திற்கு அருகே முகாமிட்டுள்ளன.
இதனால் எண்ணேக்கொல் புதூர், போட்ரப்பள்ளி, ஒட்டுகொல்லை உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கோ அல்லது வனப்பகுதி ஒட்டிய விளை நிலங்களுக்கோ செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கழுத்தில் புலிப்பல் டாலர்.. வனத்துறை விசாரணை; உறவினர்கள் போராட்டம்!