கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை கடத்தி விற்றதாக கடந்த மாதம் கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில், ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ் என்பவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் விடுதலையாகி ஓசூரை அடுத்த இராயக்கோட்டை சாலையில் சந்திப்பதற்காக மல்லேஷை அழைத்துள்ளார். கிருஷ்ணன் டாடா சுமோ காரில் சென்றுள்ளார். மல்லேஷ், அவருடன் கௌரிசங்கர் மற்றொரு நபா் என்பவரை அழைத்து சென்று நான்கு பேரும் காரில் சென்றனர்.
அப்போது, தொரப்பள்ளி அருகே சென்றபோது மூவரும் கிருஷ்ணனை கீழே இறக்கிவிட்டு காருடன் தப்பியுள்ளனர். பொதுமக்கள் சுமோ வாகனத்தின் பதிவு எண்ணை ஓசூர் டிஎஸ்பி முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், ஓசூர் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த காரை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, கௌரி சங்கரை கைது செய்தனர். விராசணையில் சங்கர் ஒரு போலி நிருபர் என்று தெரியவந்தது. தலைமறைவான பல வழக்குகளில் தொடர்புடைய மல்லேஷ், மற்றுமொரு நபர் என இரண்டு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தெற்கு வெற்றி உறுதியான, கிழக்கு ஊசலாட்டம்