ETV Bharat / state

'கிராமங்களின் பழமை மாறாமல், நகர்ப்புற வசதிகள் தரும் திட்டம்' - மாணவிகள் பேரணி - மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, கிராமங்களில் பழமை மாறாமல் நகர்ப்புற வசதிகளை வழங்கும் "தேசிய ரூர்அர்பன் மிஷன்" திட்டத்தின் நான்காவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

students-rally-to-mark-fourth-year-of-national-rural-urban-mission-project-in-hosur

author img

By

Published : Feb 21, 2020, 12:04 PM IST

மத்திய அமைச்சகத்தால், 'ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்அர்பன் மிஷன்' திட்டம், கடந்த 06.11.2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது ’நேஷனல் ரூர் அபன் மிஷன்' எனவும் அழைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை நகர்ப்புறப் பகுதிக்கு இணையாக, உயர்த்தும் பொருட்டு, இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், 300 கிராம ஊராட்சிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை, நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்த, திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி, பட்வாரப்பள்ளி தொகுப்பு கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்குப் பணிகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

இத்திட்டத்தின் மூலம் பாகலூர், அலசப்பள்ளி, பட்டவரப்பள்ளி உள்ளிட்ட 6 ஊராட்சி கிராமங்களில் நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளதால், பாகலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கிராமங்களில் தொழிற்சாலைகள் என்கிற தலைப்பில் ஓவியப்போட்டியை ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாப் பேகம் தொடங்கி வைத்ததார்.

அதனைத்தொடர்ந்து மாணவிகளின் சார்பில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவையை வலியுறுத்தி பாகலூரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஐ.டி. ஊழியர்: குவியும் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.