கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இயங்கி வரும் கனகாதாச மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவ- மாணவிகள் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் சென்றுக்கொண்டிருந்தார்.
இந்த வாகனம் பர்கூர் அருகேயுள்ள ஒப்பந்வாடி இணைப்பு சாலை அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மேல் மோதியது.
இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகளை பர்கூர் காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு