ETV Bharat / state

'சாதிக்க துடிக்கும் (ஹெச்ஐவி ) பாசிட்டிவ் குழந்தைகள்'

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை, சினேகா கிராம் எனும் தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இது குறித்த சிறப்பு தொகுப்பு.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிப்பதற்கென்று ஓர் கல்வி நிலையம்

author img

By

Published : Mar 13, 2020, 8:07 PM IST

Updated : Apr 27, 2020, 3:14 PM IST

ஆண்டுதோறும் கல்வியின் தரத்தை உயர்த்தவும் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் 'அனைவருக்கும் கல்வி' என்ற அரசின் நோக்கம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்நியப்பட்டு போவது இன்னும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. எல்லோருக்குமான கல்வி ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

அழிவில்லா செல்வமான கல்வியை தேடி பள்ளிக்கு செல்லும் இவர்கள் அவமானங்களை மட்டுமே பரிசாக பெறுகின்றனர். மேலும் செல்லும் இடமெல்லாம் வெறுப்பை மட்டுமே சந்தித்து நினைத்ததை சாதிக்கமால் சாக துணிகின்றனர். சாக்கடையை பார்ப்பது போல் இவர்களை பார்க்கும் சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்து வருகிறது ஓர் சமூக அமைப்பு.

சினேகா கிராம் தொண்டு நிறுவனத்தின் மகத்தான சேவை - சிறப்பு தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது சினேகா கிராம் தொண்டு நிறுவனம். இங்கு ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று சிறப்பு பள்ளியொன்றும் செயல்பட்டுவருகிறது. மொத்தம் 66 மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

sneha
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று சிறப்பு பள்ளி

வகுப்பு பாடம் மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை பயிற்சி, விளையாட்டு, உள்ளிட்ட பல பயிற்சிகளை பெற்று வரும் இவர்கள் வாழ்க்கை பாடத்தையும் பெறுகின்றனர். இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கு பின்னும் ஒரு சோக கதை உள்ளது. 'ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஏளனமாக பேசப்பட்ட இவர்கள் தற்போது எதற்குமே கவலைப்படாமல் கல்வி பெறுவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கின்றனர்.

gram
சாதிக்க துடிக்கும் (ஹெச்ஐவி ) பாசிட்டிவ் குழந்தைகள்

"அவமானப் பேச்சுக்கு செவி சாய்க்கமாட்டோம். நாங்கள் எல்லோரும் பாசிட்டிவ் குழந்தைகள்" என்று புன்னகையால் பதில் தருகின்றனர். இது குறித்து பள்ளியின் நிர்வாகி ஜாய் இஞ்சோடிக்கரன் ஈ டிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சொந்த காலில் நின்று, சுதந்திரமாக வாழ்வதும், முறையான கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்பை பெறுவதும் ஆகும்" என்றார்.

'தற்போது கற்போம், பிறகு சமூகத்திற்கு கற்பிப்போம்'  - தன்னம்பிக்கை மாணவர்கள்

தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் அவர்கள் மாரத்தான் உள்ளிட்ட தொலைதூர தடகளப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு மிக குறைவு. நன்றாக படித்து வேலைக்குச் செல்லும் போது பணியிடங்களில் அவர்களை அவமதிக்கும் விதமாக சக பணியாளர்கள் நடந்து கொள்ளுவது சவாலாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிப்பதற்கென்று ஓர் கல்வி நிலையம்
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிப்பதற்கென்று ஓர் கல்வி நிலையம்

மேலும் தகவல்களுக்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் தோலியல் நிபுணர் மகாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தற்போதைய சூழ்நிலையில் ஹெச்ஐவியால் பாதிப்படைந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நோய் பாதிப்பு இல்லாமல் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவத்துறை உருவாக்கியிக்கிறது.

சினேகா கிராம் பள்ளி நிர்வாகி ஜாய் இஞ்சோடிக்கரன்

ஐ.நா அமைப்பின் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிறுவனம் பின்பற்றும் U=U என்ற கொள்கையின்படி, எச்.ஐ.வி வைரஸை உடலை விட்டு நீங்குதல் (unidentified), மற்றவர்களுக்கு பரவாமல் இருத்தல் (untransmittable), என்றவாறு கட்டுப்படுத்தலாம். மேலும் ஹெச்ஐவி யால் பாதித்த இருவர் திருமணம் செய்து கொண்ட பிறகு கருவுற்றலின் போது கருமுட்டைக் கால அடிப்படையில், மருந்துகள் உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாதவாறு தடுக்கலாம்" என்று தெரிவித்தார்.

ஆக, ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்நாள் என்பது சராசரி மனிதர்களை போன்றே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வதிலேயே நம்மிடமிருந்து வேறுபட்டு நிற்பதால், அவர்களை ஒருபோதும் வேறுபடுத்தி பார்க்க வேண்டாம்.

இதையும் படிங்க :

"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர்

Last Updated : Apr 27, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.