கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுக்காக, நாரலபள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட, தரை மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள, ஏக்கல்நத்தம் எனும் மலைக் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், மலைவாழ் மக்களின் வாக்குப் பதிவுக்கான உபகரணங்களை சுமந்து செல்ல கழுதைகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில், கழுதைகள் வராததால் தேர்தல் பணியாற்றும் 15 பணியாளர்களே சுமந்து சென்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மேற்பார்வையில், இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள், மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நடந்தே கொண்டுச் சென்றனர்.
அங்கு ஒன்றாவது வார்டு அடங்கி இருப்பதால் அந்த வார்டில் இரண்டு ஆண் போட்டியாளர்கள் தனித் தனி சின்னத்தில் நிற்கின்றனர். இங்கிருந்து செல்லும் தேர்தல் பணியாளர்கள் இன்று இரவு முழுவதும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் தங்கியிருந்து வாக்குப் பதிவுகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு நாளை இரவு திரும்ப உள்ளனர்.
இதையும் படிக்க: சென்னையில் களைகட்டிய கிராமியத் திருவிழா!